அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமை மற்றும் நியாயம் கிடைக்க ஜாதி, இன, மதம், நிறம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது. மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாத்திட, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க, நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட அனைத்திந்திய மக்கள் நல கழகம் பாடுபடுகிறது.
"இந்த உலகில் நாம் வாழ இந்த உலகை படைத்தவர்க்கு நாம் செலுத்துகின்ற வாடகை சமூகசேவை."
அகில இந்திய மக்கள் நல கழகம் தானாக முன்வந்து மக்களுக்காக சேவை செய்கின்ற, சேவை மனம் கொண்ட நல்ல உள்ளங்களால் உருவாக்கப்பட்டு, தாய் நாட்டில் மனித உரிமைகள் காத்திடவும், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஊழலற்ற சமுதயத்தை உருவாக்கி அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்தோடு ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து நல்லதோர் சமூகம் மலர்ந்திட பாடுபடுகிறது. மக்களின் தேவைகளான அடிப்படை உரிமை மற்றும் வசதிகளை பெற அதிகாரிகளின் அலுவலக கதவுகளை தட்டி நியாயம் கேட்கப்படுகின்றன
(எடுத்துக்காட்டாக)
அ) பணம் கொடுத்து தரம் குறைந்த பொருட்கள், நகைகள், துணிகள் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வாங்கி தருதல்.
ஆ)ரேசன் கடைகளில் அளவு குறைபாடு, தரம் குறைந்தாலோ கண்டித்தல் மேலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வாங்கி தருதல்.
இ) வங்கி, தபால் நிலையம், பேருந்துகளில் குறைபாடு உள்ள சேவைகளை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தல்.
அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக சட்டங்கள் சரியாக செயல்பட முடியாமல் மக்கள் சமுதாயத்தில், கூடுதலான குற்றங்கள், கொலை, கொள்ளை, சிறுவர் துஷ்பிரயோகங்கள், கற்பழிப்பு மற்றும் பல சமுதாய அநியாயங்கள் நடக்கின்றன. அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படவும் குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு குறைவு, எனவே பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்த வேண்டும். எல்லா மக்களும் விழிப்புணர்வு அடையவும். எல்லா மக்களுக்கும் பொதுவான சட்டதிட்டம் உருவாக்கி அரசாங்கம் சமூக நலனுக்காக பல சட்டங்களைக் கொண்டிருந்தாலும், மக்களுக்கிடையே உள்ள பிரிவினை மற்றும் அரசியல் குறுக்கீடுகளால் நீதி மற்றும் உரிமைகள் மக்களைச் சென்றடைவதில்லை. இப்பொழுது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது ஊழல். ஊழல் காரணமாக மக்களிடையே பொருளாதார நிலை சீர் குலைவதோடு மக்கள் மனக் கஷ்டம் பணக் கஷ்டம் என இயலாமை நிலைக்குத் தள்ளப்படுவதொடு, ஏழை மக்கள் நசுக்கப்படுவதை தடுத்திட.
பொது அடிப்படை வசதி மற்றும் தொழிற்சாலை அடிப்படைத் தேவைகளான நீர், மின்சாரம், சாலை வசதி இன்றும் சரியாக இல்லாததோடு இதைப் பெற்றிட சரியான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையை மாற்றிட. எல்லாவற்றிலும் முக்கியமாக நமது இயற்கை வளங்களான காடு, காட்டு விலங்குகள், பூமியின் தாதுக்கள் பாதுகாத்திட. ஆறு, நீர் நிலை தேக்கங்கள் போதுமான அளவு இல்லாமல், மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து மாற்று வழி ஏற்றபடுத்திட, ஊழலினால் தவறாக இயற்கை வளங்கள் அழிவதை தடுத்து, நாம் மற்றும் நமது தலைமுறைக்கு பாதுகாப்பான எதிர்காலாத்தை நிலை நிறுத்த வழிவகுப்போம்.
© Copyright 2022 All Rights Reserved